ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு - உதகை காவல்துறை அசத்தல்!

உதகை நகரின் முக்கிய வீதிகளில், வாகனங்கள் மூலம் கொரோனா பாதுகாப்பு குறித்துபோலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

உதகையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதேபோல், காவல்துறையினரும் விழிப்புணர்வை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வகையில், உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் காவல்துறை மூலம் கொரோனா தடுப்பு பாதுகாப்பு குறித்து, ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விழிப்புணர்வு நிகழ்வின்போது, முகக்கவசம் இல்லாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். அதேபோல், நகரில் திறக்கப்பட்டுள்ள கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் கட்டுப்பாடுகளை மீறி வாடிக்கையாளர்களை அனுமதித்த கடைக்காரர்களுக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி ஜனார்தனன், டிஎஸ்பி மகேஸ்வரன், ஆய்வாளர்கள் ராஜன் பாபு, கண்மணி, ராஜேஷ்வரி, உதவி ஆய்வாளர்கள் விஜய் சண்முகநாதன், செந்தில் குமார், நிக்கோலஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!