உதகையில் வட்டார தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் வட்டார தேர்தல் பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நுண் பார்வையாளர்கள், வட்டார தேர்தல் பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தேர்தல் பார்வையாளர் கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:
நீலகிரியில் தேர்தல் நடைபெறும் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் 55 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. வரும் 19.02.2022 அன்று வாக்குப்பதிவு தொடங்கி முடியும் வரை தேர்தல் நடைபெறுவதை கண்காணித்து, அதன் விவரங்களை தேர்தல் பார்வையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
வாக்குப்பதிவு சரியாக நடந்து உள்ளதா என்று கண்காணிக்க வேண்டும். தாங்கள் பணிபுரியும் வாக்குச்சாவடிக்கு தேர்தலுக்கு முந்தைய நாள் சென்று அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். காலை 6 மணி முதல் 7 மணி வரை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பின்னர் மாதிரி வாக்குகள் அழிக்கப்பட்டு உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
தேர்தல் தொடக்கம் முதல் முடிவு வரை கண்காணித்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக தேர்தல் பார்வையாளர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.
வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் பொருட்கள், மருத்துவ பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டு உள்ளதா என்று வட்டார தேர்தல் பார்வையாளர்கள் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும் என்றார் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (ஜென்மம் நிலங்கள்) குணசேகரன் மற்றும் நுண் பார்வையாளர்கள், வட்டார தேர்தல் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu