/* */

உதகையில் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம்

தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக புகார்கள் வந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

HIGHLIGHTS

உதகையில் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம்
X

கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார தேர்தல் பார்வையாளர்களுக்கு தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தேர்தல் பார்வையாளர் கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் தலைமை தாங்கி பேசும்போது, வாகன நிலையான கண்காணிப்பு குழுக்கள் வாகன சோதனையின்போது, தாங்கள் சோதனையிடும் வாகனங்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். 15 உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் வாகன சோதனையை வட்டார தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக புகார்கள் வந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

வாக்குப்பதிவு எந்திரங்கள், தேர்தல் பொருட்கள் என அனைத்தும் கிடைத்து உள்ளதா என்று சரிபார்த்து வட்டார தேர்தல் பார்வையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் தொடர்பாக சந்தேகங்கள் இருந்தால் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட கையேடுகளை பார்த்தோ அல்லது தேர்தல் பிரிவு அலுவலரிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், வருவாய் அலுவலர் (ஜென்மம் நிலங்கள்) குணசேகரன் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 8 Feb 2022 10:21 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்