உதகையில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்: கார்த்தி சிதம்பரம் பங்கேற்பு

உதகையில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்: கார்த்தி சிதம்பரம் பங்கேற்பு
X
செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம் எம்.பி. 
உதகையில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில், கார்த்தி சிதம்பரம் பங்கேற்றார்.

உதகையில் இன்று காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம், சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், தனி மனிதனின் கடவுள் நம்பிக்கை மற்றும் மத சுதந்திரத்தை பறிக்கின்ற வகையில் கர்நாடக மாநிலத்தில் பாஜக அரசு கட்டாய மதமாற்ற சட்டத்தை அமுல் படுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது என்றார்.

பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையால், நிதி நெருக்கடி ஏற்பட்டு, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மற்ற நாடுகளை விட குறைய வாய்ப்பில்லை இதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினாலும், அரசு செவி சாய்ப்பது இல்லை என்றார்.

Tags

Next Story
ai marketing future