நீலகிரியில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற பா.ஜ.கவினருக்கு பாராட்டு விழா

நீலகிரியில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற பா.ஜ.கவினருக்கு பாராட்டு விழா
X

நீலகிரி மாவட்டத்தில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு உதகையில் பாராட்டு விழா நடைபெற்றது.

நீலகிரியில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற பா.ஜ.கவினருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் நான்கு நகராட்சிகள் 11 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் உதகை குன்னூர் கூடலூர் உள்ளிட்ட நகராட்சிகளிலும் , கேத்தி , உலிக்கல், ஜெகதளா, கீழ்குந்தா உள்ளிட்ட பேரூராட்சிகளிலும் பாஜக சார்பில் வேட்பாளர்கள் களம் கண்டனர்.

இதில் கீழ்குந்தா பேரூராட்சியில் வெற்றி பெற்ற ரக்சனா, பிக்கட்டி பேரூராட்சியில் வெற்றி பெற்ற ராணி , ராஜ்குமார், கோத்தகிரி பேரூராட்சியில் வெற்றிபெற்ற மோனிஷா, அதிகரட்டி பேரூராட்சியில் வெற்றி பெற்ற சசிகலா, ஆகியோருக்கும் மற்றும் தேர்தலில் நகராட்சி பேரூராட்சிகளில் போட்டியிட்டவர்களுக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாய்ண்ட் மணி கலந்து கொண்டார். மேலும் பாஜகவின் நீலகிரி மாவட்ட தலைவர் மோகன்ராஜ் , மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஈஸ்வரன், கே.ஜே.குமார் பொருளாளர் தருமன், மாவட்ட துணைத்தலைவர் பரமேஷ், நகர் தலைவர் பிரவீன் உட்பட அனைவரும் கலந்துகொண்டு நகராட்சி பேரூராட்சியில் வெற்றி பெற்றவர்களுக்கும் போட்டியிட்டவர்களுக்கும் பொன்னாடைகள் போர்த்தி கௌரவித்தனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்