உதகையில் நடந்த தமிழ் முப்பெரும் விழாவில் சமூக சேவை விருது

உதகையில் நடந்த தமிழ் முப்பெரும் விழாவில் சமூக சேவை விருது
X

உதகையில் நடந்த தமிழ் முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது.

உதகையில் நடந்த தமிழ் முப்பெரும் விழாவில் சமூக சேவை செய்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாடு தலைமைச் செயலக அனைத்து பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் ஏழை குடும்பங்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு, தமிழகத்தில் சிறந்த சமூக சேவையாற்றி வரும் சமூக நல அமைப்புகளுக்கு அய்யன் திருவள்ளுவர் விருது, பல ஆண்டுகளாக சிறப்பாக சமூக சேவையாற்றியவருபவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வு மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு என முப்பெரும் தமிழ் திருவிழா உதகையில் உள்ள ஜே.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் உள்ள கூட்டரங்களில் கோலாகலமாக நடைபெற்றது.

இப்முப்பெரும் தமிழ் திருவிழாவின் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி முகமதுஜியாவுதீன் கலந்து கொண்டு அவர் உதகை மற்றும் கோத்தகிரியில் நீதிபதியாக பணிபுரிந்தபபோது நடந்த நிகழ்வுகளையும் மக்கள் நல பணிகளையும் நினைவு கூர்ந்து பேசினார். நாம் செய்யும் சேவைகள் பொதுநலன் சார்ந்து இருக்க வேண்டும், நம்மால் மற்றவர்களுக்கு உதவி செய்யும் வாய்ப்பு கிடைத்தால் நாம் எந்த தயக்கமும் இன்றி இயன்ற உதவிகளை செய்ய முன்வர வேண்டும், நாம் செய்யும் உதவிகளுக்கான பலன்கள் நம்மை தானாக வந்து சேரும் என்றும் நமது வாழ்வில் இயன்ற வரை நம்மால் முடிந்த நன்மைகள் உதவிகளை செய்து வாழ வேண்டும் என்றும் தனது சிறப்புரையில் குறிப்பிட்டார். மேலும் நிகழ்வில் உதகையில் மற்றும் தமிழகத்தில் சிறப்பாக சமுக பணி செய்துவரும் சமுக சேவை அமைப்புகளுக்கு விருதுகளையும் பாராட்டு சான்றுகளையும் வழங்கி சிறப்பித்தார்

மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை செயலக அனைத்து பத்திரிகையாளர் சங்க நிறுவனர் தலைவர் முனைவர் குமார் மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனர் & தலைவர் ஆர்.கே.குமார் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டு சான்று மற்றும் ஏழை மக்களுக்கான நல திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர்


இவ்விழாவிற்கு உதகை மக்களுக்காக அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர் தலைவர் தமிழ் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இவ்விழாவில் உதகையில் மக்கள் நல பணியை சிறப்பாக செய்து வரும் உதகை நகரமன்ற உறுப்பினர் ஜார்ஜ், ஜெ.எஸ்.எஸ் கல்லூரி முதல்வர் முனைவர் தனபால் கல்லூரி முதன்மை அலுவலர் பசவன்ணா அப்துல்கலாம் அறக்கட்ளை நிறுவனரும் சமுக சேவகருமான தஸ்தகீர் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருதுகள் வழங்கப்பட்டன


சிறப்பான சமூகப் பணிக்கான அய்யன் திருவள்ளுவர் விருதுகள் உதகை நொண்டிமேடு பகுதியை சேர்ந்த சமுக சேவகருமான கார்த்திக், அரைஸ் அன் சைன் அறக்கட்டளை நிறுவன தலைவர் ஜெரால்ட், சுற்றுச்சூழல் நுகர்வோர் உரிமை விழிப்புணர்வு குறும்படங்கள் மூலமாக பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு பணிகளை சிறப்பாக செய்து வரும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் அமைப்பிற்கு வழங்கப்பட்டது. இவ்விருதினை அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் நிர்வாகிகள் வி.கே.பாபு மற்றும் பிரகாஷ் பெற்று கொண்டனர் குன்னூரை சேர்ந்த சமுக சேவகருமான கோவர்தணன் சமுக ஆர்வலரும் செய்தியாளருமான ஸ்ரீரமணா சுரேஷ்,கூடலூர் பகுதில் சிறப்பான சமுக பணி செய்துவரும் தாய்மை அறக்கட்டளை ஆதிவாசி மக்களுக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் சமுக ஆர்வலர் ஆல்வாஸ், கூடலூர் பகுதியில் மிக சிறப்பான சமூக பணி செய்துவரும் சிங்கபெண்ணே அறக்கட்டளை சமுக சேவை அமைப்பு,தேனலை ஆதரவற்றோர் இல்லம் சமுக சேவை அமைப்பு,குன்னூரை சேர்ந்த சமுக சேவகர் சாதிக், உதகையை சேர்ந்த வரலாற்று சிறப்பு மாணவர் கிரினித்,இரத்ததானத்தில் சிறந்த சேவையாற்றி வரும் சமுக ஆர்வலர் அட்டடி அருள்ஜேம்ஸ், பாக்கிய நகர் சாதனை மாணவிகள் செல்வி ம.புவனேஷ்வரிசெல்வி ப.மணிகா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.


தமிழ்திரு விவேகானந்தா இயற்கை வழிசமுக சேவை அமைப்பை சேர்ந்த சரவணன் செய்தியாளர்கள் தினேஷ்குமார், தினேஷ்,நவாஸ்,அன்பு அறக்கட்டளை சதிஷ் ,ராஜா,தேவி நற்பணி மன்றம்சமுக சேவை அமைப்பு, காந்தல் இரத்த பிரிவு அறக்கட்டளை ரிஸ்வான் மஞ்சூர் பிரபஞ்ச அமைதி இல்லம் சமுகசேவை அமைப்பு, உதகை ஜெயின் யுவ சேவா சங்கம் கெயிண்டர் டிரஸ்ட் சமுகசேவை அமைப்பு குன்னூர் ஸ்ரீராமகிருஷ்ணா முதியோர் இல்லம் சமுகசேவை அமைப்பு கூடலூர்ஜனார்த்தனன், தமிழ்உணர்வாளர் & கவிஞர்,உதகை ரூபி அவர்கள் கோத்தகிரி ஆகியோரின் சாதனைகளை பாராட்டி பொன்னாடை போர்த்தி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

விழாவில் 100 ஏழை குடும்பங்களுக்கு கம்பளி,அரிசி, 15 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் நலத்திட்ட உதவிகள் மக்களுக்காக அறக்கட்டளை நிறுவன தலைவர் தமிழ்வெங்கடேசன் தலைமையில் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் தொகுப்புரையை .பேராசிரியர்.எல்.மூர்த்தி வழங்கினார் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளின் பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது நிகழ்ச்சியின் இறுதியில் பேரா.ஜெயபிரகாஷ் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!