உதகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இ.கம்யூனிஸ்ட் ஆர்பாட்டம்

உதகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இ.கம்யூனிஸ்ட் ஆர்பாட்டம்
X

உதகையில் வாகனத்தை தள்ளிக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உதகை மத்திய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உதகை மத்திய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் போஜராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். சமையல் கியாஸ் சிலிண்டர் வாரந்தோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது. சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியினர் இருசக்கர வாகனங்களை கையால் தள்ளிக் கொண்டு சென்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story