ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு நினைவு அஞ்சலி

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு நினைவு அஞ்சலி
X
நிகழ்ச்சியில் 30 அடி உயர மலர் வளையம் வைக்கப்பட்டு, உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் படங்கள் உள்ள பேனர் வைக்கப்பட்டிருந்தது

குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரத்தில் கடந்த டிசம்பர் 8-ந் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நினைவேந்தல் நிகழ்ச்சி உதகை காந்தல் முக்கோணம் விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

தேசிய மாணவர் படை கர்னல் சீனிவாஸ் அணையா தீபத்தை ஏற்றி வைத்தார். விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுக்கு கர்னல், முன்னாள் ராணுவ வீரர்கள், என்.சி.சி. மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். ராணுவ அதிகாரிகள் உடனிருந்தனர்.

நிகழ்ச்சியில் 30 அடி உயர மலர் வளையம் வைக்கப்பட்டு, உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் படங்கள் உள்ள பேனர் வைக்கப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு சசிகுமார், முன்னாள் ராணுவ வீரர்கள், என்.சி.சி. மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture