உதகையில் மரம் நடும் விழா ஆட்சியர் பங்கேற்பு
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின்97-வது பிறந்தநாளை முன்னிட்டு, 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உதகமண்டலம் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் முன்னிலை வகித்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படியும், வனத்துறை அமைச்சர் அவர்களின் அறிவுரையின்படியும், நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, 1000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட சீதோசன நிலைக்கு ஏற்ப வளரும் மரங்கள் நடவு செய்யப்படுகிறது. வனத்துறை அமைச்சர் அவர்கள் ஏற்கனவே நமதுமாவட்டத்தில் இதுபோன்ற நிகழ்வுகளில் மரக்கன்றுகள் நடவு செய்யும்போது, சிறிய மரக்கன்றுகளுக்கு பதிலாக பெரிய மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்கள்.
அதன் அடிப்படையில் இன்று வனத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரிய அளவில் வளரக்கூடிய மரங்களை நடவு செய்து இப்பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இன்று ஒருநாள் மட்டும் உதகை, குன்னூர், குந்தா, கூடலூர் ஆகியபகுதிகளில் மொத்தம் 1,000 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த1,000 மரக்கன்றுகள் பாதுகாப்பான இடங்களில் நடவு செய்யப்படவுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் பசுமையினை பேணி காப்பதற்காக இதுபோன்று திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்." என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா, உதவி வனப்பாதுகாவலர் சரவணன் உள்ளிட்ட வனத்துறை மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu