நீலகிரி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட கலெக்டர்

வாக்காளர் பட்டியலை வெளியிட்ட கலெக்டர் அம்ரித்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்காளர் நிலவரம்:
உதகை சட்டப்பேரவை தொகுதியில் (108), 98,135 ஆண் வாக்காளர்களும், 1,07,283 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 6 பேர் என மொத்தம் 2,05,424 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கூடலூர் சட்டப்பேரவை தொகுதியில் (109 தனி) 92,955 ஆண் வாக்காளர்களும், 97,914 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 2 என மொத்தம் 1,90,871 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
குன்னூர் சட்டப்பேரவை தொகுதியில் (110), 91,065 ஆண் வாக்காளர்களும், 1,00,323 பெண் வாக்காளர்கள், 3 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 1,91,391 வாக்காளர்கள் உள்ளனர்.
மூன்று சட்டப்பேரவை தொகுதிகளிலும் 2,82,155 ஆண் வாக்காளர்களும், 3,05,520 பெண் வாக்காளர்களும் மற்றும் உதகை சட்டப்பேரவை தொகுதியில் 6 திருநங்கைகள், குன்னூர் சட்டப்பேரவையில் 3, கூடலூரில் 2 திருநங்கையர் என மொத்தம் 5 லட்சத்து 87 ஆயிரத்து 686 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை விட தற்போது கூடுதலாக 5879 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu