உதகையில் இடிந்து விழுந்த மருத்துவமனை தடுப்புச் சுவர்: கலெக்டர் ஆய்வு

உதகையில் இடிந்து விழுந்த மருத்துவமனை தடுப்புச் சுவர்: கலெக்டர் ஆய்வு
X

உதகை அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவரை நேரில் பார்வையிட்ட கலெக்டர்  இன்னசென்ட் திவ்யா.

உதகையில் கனமழையால் தலைமை மருத்துவமனையில் தடுப்புச் சுவர் இடிந்த பகுதியை நீலகிரி கலெக்டர் பார்வையிட்டார்.

உதகை அரசு தலைமை மருத்துவமனை வெளிநோயாளிகள் பிரிவு பகுதியில், கனமழை காரணமாக தடுப்புச்சுவருடன் கூடிய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

இதனால் 50 அடி தூரம் அந்தரத்தில் தொங்குகிறது. நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கனமழை காரணமாக இடிந்து விழுந்த உதகை அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர், மேலும் இடிந்து விழாமல் இருக்க உடனடியாக தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்பகுதியில் பொதுமக்கள் நடமாடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

Tags

Next Story