உதகையிலுள்ள கொரோனா தடுப்பு மையத்தில் கலெக்டர் ஆய்வு

உதகையிலுள்ள கொரோனா தடுப்பு மையத்தில் கலெக்டர் ஆய்வு
X

கொரோனா மையத்தில் ஆய்வு செய்தார் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்.

உதகையிலுள்ள கொரோனா தடுப்பு மையத்தில் கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார்.

உதகை நகரில் பல்வேறு பகுதிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் அம்ரித் தற்போது உதகை குட் ஷெப்பர்டு பள்ளியில் 189 படுக்கை வசதிகள் கொண்ட நல்வாழ்வு மை யம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் தற்போது 36 பேர் சிகிச்சையில் உள்ளதாக கூறினார்.

இதேபோன்று குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளிலும் நல்வாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உருவாகும் சவால்களை எதிர்கொள்ள போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil