உதகையில் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
உதகை காந்தல் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.
உதகை காந்தல் பகுதியில் இன்று தடுப்பு ஊசி செலுத்தும் பணியை தொடங்கிவைத்து பார்வையிட்ட பின் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடையே பேசிய அவர் கூறியதாவது.
பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கும் பொருட்டு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பேருந்து மற்றும் வாகன ஓட்டுநர்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தியதை உறுதிசெய்தபின்தான் அவர்கள் பணிசெய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
நீலகிரி மாவட்டத்தில 9 பேரூராட்சி, ஒரு நகராட்சி மற்றும் இரு வட்டாரங்களில் 100 சதவிகித தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், மாவட்ட அளவில் 100 சதவிகித தடுப்பு ஊசி செலுத்தும் இலக்கை அணுகி வருவதாக அவர் கூறினார்.
அண்டை மாநிலமான கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பின் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, எல்லைப்பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டு தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் வைத்திருப் பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
மருத்துவரின் முறையான சான்று இல்லாத அனைவரும் தடுப்பு ஊசி செலுத்த வேண்டும் என்றும், தடுப்பு ஊசி செலுத்தாமல் சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக யாரும் இருக்ககூடாது என தெளிவுபடுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu