நகர் மன்றக்கூட்டம் கூடுவதால் புதுப்பொலிவு பெறும் உதகை நகராட்சி மன்றம்

நகர் மன்றக்கூட்டம் கூடுவதால் புதுப்பொலிவு பெறும் உதகை நகராட்சி மன்றம்
X
நகர்மன்ற கூட்டம் கூட உள்ளதால் உள்பகுதியில் கூட்டரங்கம், அறைகள், கதவுகளுக்கு வர்ணம் தீட்டி பொலிவுபடுத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 108 வார்டுகள், 11 பேரூராட்சிகளில் 186 வார்டுகள் என மொத்தம் 294 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 19.02.2022 அன்று நகர்ப்புற உள்ளாட்சி நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 294 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்கள் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சி, வரும் 2.03.2022 அன்று நடைபெறுகிறது. 15 உள்ளாட்சி அமைப்புகளில் முதல் கூட்டம் நடைபெறும் கூட்டரங்கத்தை சுத்தப்படுத்தி தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

உதகை நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள நகர்மன்ற கூட்ட அரங்கம் கடந்த 5 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்தது. நகர்மன்ற கூட்டம் கூட உள்ளதால், உள்பகுதியில் கூட்டரங்கம், அறைகள், கதவுகளுக்கு வர்ணம் தீட்டி பொலிவுபடுத்தப்பட்டு உள்ளது. பழுதடைந்த விளக்குகள், கதவுகள் சீரமைக்கப்பட்டன. இருக்கைகள், மேஜைகள் சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறது. கூட்டரங்கம், நகர்மன்ற தலைவர் அறை, உறுப்பினர்கள் அறை புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

Tags

Next Story