உதகை மார்கெட்டில் நகராட்சி மூலம் தூய்மை பணி

உதகை மார்கெட்டில் நகராட்சி மூலம் தூய்மை பணி
X
அம்மா உணவகத்துக்கு அதிகம் பேர் வந்து செல்வதால் கொரோனா பரவலை தடுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

நாடு முழுவதும் கொரோனா, புதிய வகை வைரஸ் பரவுகிறது. உதகையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. உதகை நகராட்சி மூலம் பொதுமக்கள் அதிகமாக கூடும் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் தூய்மைப் பணியாளர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அம்மா உணவகத்துக்கு அதிகம் பேர் வந்து செல்வதால் கொரோனா பரவலை தடுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. ஏ.டி.சி. பஸ் நிறுத்தம் உள்பட மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளித்தும், கழுவியும் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!