உதகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்

உதகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்
X

ஊட்டி ஏ.டி.சி. திடல் முன்பு சிஐடியு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் அறிக்கையில் 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் பணி நியமனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணியிட மாறுதல் கொள்கையை உருவாக்கி அமலாக்க முறைகேடாக வழங்கிய பணியிட மாறுதல் ஆணைகளை ரத்து செய்ய வேண்டும், கொரோனா பரவல் தடுப்பு ஏற்பாட்டு செலவின தொகையை முழுமையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சி.ஐ.டி.யு. சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடல் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நீலகிரி மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் அறிக்கையில் 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் பணி நியமனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. சட்டமன்றத்தில் இந்த அறிவிப்புக்காக காத்திருக்கிறோம். நீலகிரி மாவட்டத்தில் இரவு பணி நேரம் குறைக்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மேல்முறையீடு செய்யாமல் சட்டத்திருத்தம் செய்யாமலும் மதுக்கூடங்களை மூட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. டாஸ்மாக் மாநில குழு உறுப்பினர் நவீன் சந்திரன், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!