கோடை சீசனை முன்னிட்டு உதகையில் சர்க்யூட் பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து கழகம் ஏற்பாடு

கோடை சீசனை முன்னிட்டு உதகையில் சர்க்யூட் பஸ்கள்  இயக்கம்: போக்குவரத்து கழகம் ஏற்பாடு
X
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் நகரிலிருந்து சுற்றுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது

ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், 10 சர்க்கீயூட் பஸ்கள் இயக்கப்படுகிறது. கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், தற்போது ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்துள்ளது. சமவெளிப் பகுதிகளில் வெயில் வாட்டி வரும் நிலையில், வெப்பத்தில் இருந்து தப்பிக்க பலர் ஊட்டிக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர்.

கடந்த ஒரு வார காலமாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று முதல் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சுற்றுலா பயணிகளின் பண விரயத்தை தடுப்பதற்காகவும், அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டுரசிப்பதற்காக கடந்த 14 ம் தேதி முதல் போக்குவரத்து கழகம் சார்பில் சர்க்கீயூட் பஸ்கள் இயக்கப்பட்டன. ஊட்டிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்த நிலையில்,10 பஸ்கள் வரை இயக்கப்பட்டன. இன்று முதல் சுற்றுலா பயணிகள் வர மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்பதால், சர்க்கியூட் பஸ் சேவையை மேலும் அதிகரிக்க போக்கவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

இந்த பஸ்கள் ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலாதலங்களான தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம், ரோஜாபூங்கா, சிறுவர் பூங்கா மற்றும் தேயிலை பூங்கா ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் குறைந்த கட்டணத்தில் அனைத்து பகுதிகளையும் கண்டு ரசித்துசெல்ல முடிகிறது. இதுதவிர படகு இல்லம் மற்றும் பூங்கா இடையே பார்க் அன்ட்ரெய்டு பஸ்களும் நேற்று இயக்கப்படுகிறது. மூன்று பார்க்அன்ட் ரெய்டு பஸ்கள் இயக்கப்பட்டன.சுற்றுலா பயணிகள் வருகையை பொருத்து இதனையும் அதிகரிக்கபோக்குவரத்து கழகம்முடிவு செய்துள்ளது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்