உதகையில் ஆதரவற்றோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

உதகையில் ஆதரவற்றோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
X

உதகை நகராட்சி ஆணையர், ஆதரவற்றோருக்கு புத்தாடைகளை வழங்கி கேக் வெட்டி, கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர். 

உதகையில் ஆதரவற்றோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. உடைகள், பரிசுகள் வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம், உதகை முள்ளி கொரை பகுதியில் உள்ள அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இருக்கின்றனர். ஆதரவில்லா இங்குள்ளவர்களுக்கு, ஒவ்வொரு பண்டிகையின்போது அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லம் சார்பில் அனைவருக்கும் புத்தாடை வழங்கி ஜாதி மத இன வேறுபாடுகளை கடந்து பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் கலந்து கொண்டு, ஆதரவற்றோருக்கு புத்தாடைகளை வழங்கி கேக் வெட்டி அவர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்த இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையில் அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!