ஜெருசலேம் செல்ல விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்:நீலகிரிஆட்சியர் தகவல்
ஊட்டி மாவட்ட ஆட்சியர் அம்ரித்
தமிழகத்தை சார்ந்த அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக நிதி உதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முதல்கட்டமாக 600 பயனாளிகளில் 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகளுக்கு முன்னுரிமை அளித்து ஜெருசலேம் புனித பயணத்திற்கு அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு மட்டும் வழங்கப்படும் மானியம் ரூபாய் 37,000 இருந்து ரூபாய் 60,000 ஆக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வர கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகள் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu