/* */

உதகையில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

உதகையில் நடைபெற்ற விழாவில், தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

உதகையில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
X

தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ஊட்டி நகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி, மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ஊட்டி நகராட்சியில் பணிபுரிந்து வரும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை கையாளுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

முகாமில், தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி, குப்பைகளை சேகரிப்பது, அப்புறப்படுத்துவது, உரமாக மாற்றுவது போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும் என்று, நகராட்சி சுகாதார அலுவலர் (பொறுப்பு) ஸ்ரீதர் அறிவுறுத்தினார். ஊட்டி நகரில் குப்பைகளை அகற்றி தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்து வரும் பணியாளர்களின் தூய்மைப் பணியை கவுரவிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை மறுசுழற்சி செய்து, மீண்டும் பயன்படுத்துவது குறித்த கண்காட்சி நடந்தது இதில் சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Oct 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு
  3. ஆன்மீகம்
    நம் கஷ்டங்களை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது..!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் முதலிடம் பெற்ற மாணவி பகிர்ந்த வெற்றியின் ரகசியம்...
  5. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  6. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  7. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!