உதகையில் கொரோனா 2 ம் கட்ட சிகிச்சைக்கான மையம் தயார்

உதகையில் கொரோனா 2 ம் கட்ட சிகிச்சைக்கான மையம் தயார்
X
உதகையில் கொரோனா தொற்று இரண்டாம் கட்ட சிகிச்சை அளிக்கும் வகையில் 80 படுக்கைகள் தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கொரானா சிகிச்சை மையங்களாக தனியார் பள்ளிகளும், அரசு இளைஞர் விடுதி மற்றும் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாவட்டத்தில் இன்றைய நிலவரப்படி 175 நபர்களுக்கு கொரோனா தொற்று பட்டியலில் இருந்து வரும் நிலையில் 2 ம் கட்ட சிகிச்சை பெற உதகையில் உள்ள காவலர் சிறுவர் மன்றம் தயார் படுத்தப்பட்டு வருகிறது.

முதல் சிகிச்சை பெற்று இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக காவலர்களின் சிறுவர் மன்றம் தயார் படுத்தப்பட்டு உள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் 80 படுக்கைகள் கொண்ட பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி உத்தரவின் பேரில் ஆய்வாளர் மஹாராஜன் தலைமையில் கிருமிநாசினிகள் தெளித்து தூய்மை பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்