நீலகிரி மாவட்டத்தில் கேரட் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் கேரட் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
X
குவித்து வைக்கப்பட்டுள்ள கேரட்.
நீலகிரி மாவட்டத்தில் கேரட் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் பல பகுதிகளில் கேரட் விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இங்கு விளையும் கேரட்டுகள் மேட்டுப்பாளையம் மட்டுமன்றி பிற மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிற்கும் நாள்தோறும் டன் கணக்கில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக கேரட் விலை சராசரியாக 30 முதல் 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கேரட் விலை அதிகரித்துள்ளது.

தற்பொழுது ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையத்தில் கேரட் கிலோ 65 ரூபாய் முதல் 70 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த விலை ஏற்றத்தால் கேரட் விவசாயம் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!