நீலகிரியில் தொடங்கியது பொது போக்குவரத்து - பொதுமக்கள் மகிழ்ச்சி

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் பொது போக்குவரத்திற்கு அனுமதி யளிக்கப்பட்டுள்ள நிலையில், மலை மாவட்டமான நீலகிரியில் பேருந்துகள் இயக்கம் தொடங்கியது.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்ததால், இன்று முதல் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இதுவரை இயக்கப்படாமல் இருந்த பொதுப்போக்குவரத்து இன்றுமுதல் துவங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் மட்டும் உள்ளூர் பேருந்துகள் 150 ம், பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் 200 என மொத்தம் 350 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதிகாலை முதலே உதகை மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் குறைந்த எண்ணிக்கையில் வந்து சென்றனர்.

பேருந்து ஓட்டுனர்கள் கூறுகையில், பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கி இருப்பது, மகிழ்ச்சிய தருகிறது. பயணிக்கும் போது பொதுமக்கள், சமூக இடைவெளி கடைபிடித்து, முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அப்போதுதான் கொரோனா தொற்றை முழுமையாக விரட்டி, பழைய நிலைக்கு திரும்ப முடியும் என்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!