உதகையில் 6 வயது சிறுவன் தாய்மாமனால் தாக்கப்பட்டு உயிரிழப்பு

உதகையில் 6 வயது சிறுவன் தாய்மாமனால் தாக்கப்பட்டு உயிரிழப்பு
X
உதகையில், சிறுவனை கொன்ற வழக்கில், தாய்மாமனை போலீசார் கைது செய்தனர்.

உதகை அருகே மஞ்சனக்கொரை ஜல்லிக்குளி பகுதியை சேர்ந்த ராஜ்குமார், ஷாலினி ஆகியோரின் 6 வயது மகன் ஜீவன் ஸ்ரீ. சிறுவனின் பெற்றோர் ராஜ்குமார் - ஷாலினி இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் மகன் ஜீவன்ஸ்ரீ, அவனது பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தான். இவர்களின் வீட்டருகே குடியிருந்து வருபவர் சிறுவனின் தாய்மாமன் விஜயகுமார்.

சிறுவன் ஜீவன் ஸ்ரீயும், மாமா விஜயகுமாரும் அடிக்கடி கிண்டல் அடித்து விளையாடி வருவது வழக்கம். அதேபோல் சிறுவன், தனது மாமாவை கிண்டல் செய்து விளையாடிள்ளான். இதில், அவனது மாமா விஜயகுமார் சற்று கோபப்பட்டு சிறுவனை தாக்கியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு சிறுவனை கம்பியால் தாக்கியதாக தெரிகிறது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுவன், வலியால் துடித்துள்ளான். சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் சிறுவனை உதகை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

உதகை நகர் மத்திய காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரித்த போது, சிறுவனின் மாமா விஜயக்குமார் பலமாக அடித்தது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து, உதகை B1 காவல் துறையினர் விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!