நீலகிரியிலுள்ள இண்ட்கோ தேயிலை தொழிலாளர்களுக்கு போனஸ்

நீலகிரியிலுள்ள இண்ட்கோ தேயிலை தொழிலாளர்களுக்கு போனஸ்
X

இன்கோசர்வ் தலைமை செயல் அலுவலர் சுப்ரியா சாஹூ.

நீலகிரி மாவட்டத்தில் இன்கோசர்வ் கீழ் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் இன்கோசர்வ் கீழ் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு ஆணைப்படி ஆண்டுக்கு 8.33 சதவீத போனஸ், 1.67 சதவீத கருணை தொகையை வழங்க வேண்டும்.

தேயிலைத்தூள் வியாபாரத்தில் சமீப காலமாக ஏற்பட்ட தொய்வு காரணமாகவும், கடும் விலை சரிவு காரணமாகவும் தொழிற்சாலை நிர்வாகங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து தலைமை செயல் அலுவலர் தலைமையில் தொழிலாளர்களுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் இன்கோசர்வ் தலைமை செயல் அலுவலர் சுப்ரியா சாஹூ பேசும்போது, தொழிற்சாலைகளில் உறுப்பினர்கள் அளிக்கும் பச்சை தேயிலையில் இருந்து தரமான தேயிலைத்தூள் தயாரித்து சந்தைக்கு அனுப்புவதில் தொழிலாளர்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது.

விலை வீழ்ச்சி காரணமாக போனஸ் வழங்க முடியாத நிலை உள்ளது. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு தொழிலாளர்களுக்கு ரூ.60 லட்சம் போனஸ் வழங்க இன்கோசர்வ் நிதியில் இருந்து வழங்க அனுமதி வழங்கப்படுகிறது. தொழிலாளர்கள் தொழிற்சாலை மூலம் போனஸ் பெற்றுக் கொள்ளலாம் என்றார். இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!