தமிழக முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அனுப்பிய பாஜகவினர்

தமிழக முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அனுப்பிய பாஜகவினர்
X

தமிழக முதல்வருக்கு 500 தபால் அட்டைகள் மூலம் வாழ்த்து அனுப்பிய பாஜகவினர்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாடவும், ஊர்வலம் நடத்தவும் அனுமதி வேண்டி தமிழக முதல்வருக்கு 500 வாழ்த்து அட்டைகள் அனுப்பப்பட்டது.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் இந்துக்கள் எழுச்சியாக கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி இந்த முறை வீட்டிலிருந்தே கொண்டாட தமிழக அரசு கூறியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக கொண்டாடப்பட முடியாமல் போன விநாயகர் சதுர்த்தி இந்த முறை கொண்டாட தயாராக இருந்த நிலையில், தமிழக அரசு இதற்கு அனுமதி மறுத்தது. இது தமிழகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது எனவே இதற்கு ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, பாஜக சார்பில் பல கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் பாஜக சார்பில் தமிழக முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி நடத்த அனுமதி கோரியும், ஊர்வலம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி 500 தபால் அட்டைகள் மூலம் முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அனுப்பும் நிகழ்வு உதகையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜகவினர் கூறுகையில், மற்ற மதங்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு மட்டும் அனுமதி இருக்கும்பொழுது இந்துக்கள் எழுச்சி நாளாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திக்கு தடை விதித்திருப்பது வன்மையாக கண்டிப்பதோடு, எந்தத் தடை இருந்தாலும் விநாயகர் சதுர்த்தி நடந்தே தீரும் என தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story