சிறந்த நகராட்சியாக உதகை தேர்வு: பணியாளர்களுக்கு பாராட்டு விழா

சிறந்த நகராட்சியாக உதகை தேர்வு: பணியாளர்களுக்கு பாராட்டு விழா
X

பரிசு பெறும் பணியாளர்கள்.

உதகை சிறந்த நகராட்சியாக தேர்வு பெற்றதற்காக பணியாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் சிறந்த நகராட்சியாக உதகை நகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக அரசால் கடந்த சுதந்திர தினத்தன்று முதல்வர் விருது வழங்கினார். இதை கொண்டாடும் விதமாக உதகமண்டலம் நகராட்சி சார்பில் கொரோனா காலத்தில் இருபத்தி நான்கு மணி நேரமும் சிறந்து பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள், நகர் நல மருத்துவ பணியாளர்கள், ஆகியோருக்கு இன்று விருதுகள் வழங்கி பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் நீலகிரி எம்பி ஆ.இராசா மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக நீங்கள் ஆற்றிய பணிகள் போற்றுதலுக்குரியதாகும் என விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்தனர். சிறந்து பணியாற்றியவர்களுக்கு கேடயமும், பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி, துணை ஆட்சியர் மோனிகா ராணா, துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், நகர்நல மருத்துவ பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!