/* */

உதகையில் நடந்த தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் நிறைவு

தேனீ வளர்ப்பு சிறு தொழிலை பெரும் தொழிலாக மாற்றியமைத்து பெண்கள் முன்னேற முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

உதகையில் நடந்த தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் நிறைவு
X

 தேசிய தேனீ வாரியம் சார்பில்,  தேனீ வளர்ப்பு குறித்த 7 நாள் பயிற்சி முகாம் ஊட்டி ஆவின் மையத்தில் பயிற்சி முடித்த பால் உற்பத்தியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகம், தேசிய தேனீ வாரியம் சார்பில் பால் தேனீ வளர்ப்பு குறித்த 7 நாள் பயிற்சி முகாம் ஊட்டி ஆவின் பயிற்சி மையத்தில் நடந்தது.

கடைசி நாளான இன்று, திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலைய துணை பேராசிரியர் டாக்டர் கவிதா கலந்து கொண்டு பேசியதாவது: வேளாண் தேவதைகள் தேனீக்கள். தேனீ வளர்ப்பினால் பயிர் மகசூலை 20 முதல் 50 சதவிகிதம் வரை அதிகரிக்க முடியும். அதிகப்படியான தேவையற்ற பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாட்டினால் தேனீக்கள் அழிக்கப்படுகின்றன. அணிந்து கொண்டிருக்கும் தேனீ இனங்களை காப்பது மனித குலத்தின் தலையாய கடமையாகும்.

ஏனென்றால் தேனீக்கள் இல்லை என்றால் மனித சமுதாயம் நான்கு வருடத்தில் அழிந்துவிடும். சுத்தமான மதிப்புக்கூட்டப்பட்ட தேன் அதிக விலைக்கு விற்கப்படுகின்றது. வீட்டில் இருக்கும் பெண்கள் முதலீடு குறைவான இந்த சிறு தொழிலை லாபம் தரும் பெரும் தொழிலாக மாற்ற முடியும் என்று தெரிவித்தார். பின்னர் பயிற்சி முடித்த பால் உற்பத்தியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Updated On: 29 March 2022 11:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  2. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  3. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  4. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  6. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  7. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  8. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...
  9. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  10. வீடியோ
    🔴LIVE : சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ||...