"ஹலோ நான் கரடி வந்திருக்கேன்" - உதகையில் வீட்டுக்கதவை தட்டிய கரடி!

உதகை கொடலட்டி பகுதியில் வீட்டினுள் நுழைய முயன்ற கரடியால், வீட்டு உரிமையாளர் கதி கலங்கி பீதியில் உறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கொடலட்டி கிராமத்தில், 50 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராமத்தையொட்டி அடர்ந்த தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு காம்பவுண்ட் குடியிருப்புகளும் உள்ளன.
இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக வந்த கரடி ஒன்று, தனியாக உள்ள வீட்டின் காம்பவுண்டை தாண்டி உள்ளே நுழைந்தது. பின்பு, வீட்டு வளாகத்திற்குள் அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்த கரடி, சில நிமிடங்கள் கழித்து, வீட்டின் கதவை தட்டியது.

வீட்டில் உள்ளவர்கள் கரடியின் வருகையால், பீதியடைந்தனர். அதே நேரம், கரடி செய்த சேட்டைகளை, மொபைல் போனில் பதிவு செய்தனர். இதனிடையே, வீட்டினுள் ஆட்கள் நடமாட்டத்தை கண்ட கரடி, சத்தம் போடாமல் வந்த பாதையில் திரும்பிச் சென்று, தேயிலை தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.

இதனிடையே, கரடி நடமாட்டம் பற்றி, கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் ஆய்வு நடத்தி கரடியின் படப்பதிவுகளை பார்த்து, கரடி நடமாட்டத்தை கண்காணிப்பதாக உறுதி அளித்துச் சென்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!