உதகையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

உதகையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள்.

பொதுத்துறை வங்கிகள் 80 கிளைகள் மூடப்பட்டதை எதிர்த்து அலுவலர்கள், ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய வங்கி அலுவலர்கள், ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் நீலகிரி மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. பொதுத்துறை வங்கிகள் 80 கிளைகள் மூடப்பட்டு இருந்தது. அலுவலர்கள், ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உதகை கனரா வங்கி முன்பு, கனரா வங்கி அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல செயலாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார். பாராளுமன்றத்தில் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க புதிய சட்ட மசோதா விவாதித்து வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல் உதகை ஸ்டேட் வங்கி முன்பு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலை நிறுத்த போராட்டத்தால் நீலகிரியில் பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை ரூ 100 கோடிக்கு பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்