உதகையில் வாழை நாற்று உற்பத்தி பயிற்சி முகாம் : மாணவ, மாணவியர் ஆர்வம்
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் திசு வளர்ப்பு கூடத்தில், வாழை நாற்றுகள் உற்பத்தி குறித்த பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவியர்.
நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில், திசு வளர்ப்பு கூடம் உள்ளது. இங்கு ஜி 9 ரக வாழை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்ட பின்னர், தேவைப்படும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, தாவரவியல் பூங்காவில் திசு வளர்ப்பு முறையில், வாழை நாற்றுகள் உற்பத்தி குறித்த பயிற்சி முகாம் நடந்தது. தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் , திசு வளர்ப்புக் கூடத்தில் ஜி-9 ரக வாழை நாற்றுகளை உற்பத்தி செய்வது, குறிப்பிட்ட வெப்பநிலையில் பராமரிப்பது, நர்சரியில் இயற்கை உரங்களை மூலம் நன்றாக வளர வைப்பது குறித்து விளக்கினார்.
மேலும் பூங்காவில் மலர், அலங்கார நாற்றுகளை விதைத்து நடவுக்கு தயார் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் திசு வளர்ப்பு கூடம், நர்சரி மற்றும் பழமையான தாவரங்கள், மரங்களை பார்வையிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu