நீலகிரி டூ லடாக் வரை விழிப்புணர்வு ஏற்படுத்தி திரும்பிய இளைஞர்

நீலகிரி டூ லடாக் வரை விழிப்புணர்வு ஏற்படுத்தி திரும்பிய இளைஞர்
X

உதகை திரும்பிய நித்திஷை வரவேற்ற பெற்றோர்கள்.

நீலகிரி முதல் லடாக் வரை பிளாஸ்டிக் மற்றும் கொரோனா விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு திரும்பிய உதகை இளைஞர்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சாம்ராஜ் பகுதியை சேர்ந்தவர் நித்திஷ். இவர் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள கல்லூரியில் பிஇ இறுதியாண்டு படித்து வருகிறார். பிளாஸ்டிக்கால் மனிதர்களுக்கும் , விலங்குகளுக்கும், இயற்கைக்கும் ஏற்படும் தீமைகளை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், நாட்டு மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நீலகிரியில் இருந்து காஷ்மீர் லடாக் வரை 6752 கிலோமீட்டர் தனிநபராக பைக் பயணம் மேற்கொண்டு , 11 மாநிலங்கள் 3 யூனியன் பிரதேசங்கள் கடந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். லடாக் சென்று மீண்டும் உதகை திரும்பிய இளைஞரை அவரின் பெற்றோர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!