உதகையில் மனநலம் குறித்த விழிப்புணர்வு பேரணி

உதகையில் மனநலம் குறித்த விழிப்புணர்வு பேரணி
X

உதகையில் மனநலம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

செவிலியர்களுக்கு மனநல விழிப்புணர்வு நாடகம் கோலப்போட்டி, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.

உலக மனநல வாரம் கடந்த 10-ம் தேதி முதல் வருகிற 16-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மனநல மருத்துவத் துறை சார்பில், சமமற்ற உலகில் மன ஆரோக்கியம் என்ற தலைப்பில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி உலக மனநலம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணி உதகை அரசு மருத்துவமனையில் இருந்து தொடங்கி ஸ்டேட் வங்கி வழியாக கலெக்டர் அலுவலகம் வரை சென்று செவிலியர் பயிற்சி பள்ளியை வந்தடைந்தது. தொடர்ந்து பயிற்சி பள்ளியில் உலக மனநல வார விழா நடந்தது. மாவட்ட மனநல குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி ராஜு கலந்து கொண்டு பேசினார்.

இதையடுத்து செவிலியர்களுக்கு மனநல விழிப்புணர்வு நாடகம், கோலப்போட்டி, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. சிறந்த ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி, துணை முதல்வர் ஜெயலலிதா மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!