பிளாஸ்டிக்கிற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்

பிளாஸ்டிக்கிற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்
X

பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்த அம்ரித்.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் எஸ்.பி.அம்ரித் தலைமை தாங்கி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், தடை செய்யப்பட்ட மற்றும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான ஒரு வார விழிப்புணர்வு பிரச்சார தொடக்க நிகழ்ச்சி உதகை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் எஸ்.பி.அம்ரித் தலைமை தாங்கி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு பதாகைகள், போஸ்டர்களை வெளியிட்டு மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு வழங்கி பேசினார். அவர் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை சிறப்பாக எவ்வித தொய்வும் இன்றி செயல்படுத்துவது மிகவும் இன்றியமையாததாகும்.

இதனை உணர்ந்து பொதுமக்கள் மற்றும் பிறப் பங்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். அதன் அடிப்படையில் தடை செய்த மற்றும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க ஒரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று முதல் வருகிற 12-ந் தேதி வரை நடைபெறுகிறது.

தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!