ஊட்டியில் கடன் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு மற்றும் கடன் வழங்கும் முகாம்; ஆ. ராசா பங்கேற்பு

ஊட்டியில் கடன் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு மற்றும் கடன் வழங்கும் முகாம்; ஆ. ராசா பங்கேற்பு
X

Nilgiri News, Nilgiri News Today - ஊட்டியில் நடந்த கடன் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு மற்றும் கடன் வழங்கும் முகாமில் ஆ. ராசா எம்.பி பங்கேற்றார்.

Nilgiri News, Nilgiri News Today- ஊட்டியில், பல்வேறு துறைகள் சாா்பில் கடன் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு மற்றும் கடன் வழங்கும் முகாம் நடந்தது.

Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டம், ஊட்டி சேரிங்கிராஸ் தோட்டக்கலைத் துறை கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம், மகளிா் திட்டம், தாட்கோ, ஆவின், வாழ்ந்து காட்டுவோம், தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் கடன் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு மற்றும் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் ராமசந்திரன், நீலகிரி எம்.பி ஆ. ராசா ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்று, 136 பயனாளிகளுக்கு ரூ.11.81 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சா் ராமச்சந்திரன் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் தேயிலை, காபி தூள் தயாரித்தல், மசாலா பொருட்கள் தயாரித்தல், வாசனை திரவியங்கள் தயாரித்தல், சாக்லெட், வா்க்கி தயாரித்தல், கேரட் கழுவும் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் தொடங்க வாய்ப்பு உள்ளது.

மேலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சுயமாக தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற முகாம்களில் கலந்துக் கொண்டு அரசின் திட்டங்களை அறிந்து தொழில் தொடங்கி வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை உயா்த்திக் கொள்ள முன்வர வேண்டும், என்றாா்.

பின்னா் மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வாழ்ந்து காட்டுவோம், மாவட்ட முன்னோடி வங்கி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் ஆகிய துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் (பொ) கீா்த்தி பிரியதா்ஷினி, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷபிலாமேரி, ஆவின் பொதுமேலாளா் ஜெயராமன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் சண்முகசிவா, தாட்கோ பொது மேலாளா் ரவிசந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil