உதகை நகரில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியால் பரபரப்பு

உதகை நகரில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியால்  பரபரப்பு
X

கொள்ளை முயற்சி நடந்த, உதகை பேங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம்.

உதகை நகர் மையப்பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க நடந்த முயற்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உதகை நகரின் மையப்பகுதியில் பேங்க ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது வங்கியின் அருகில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளனர்,

வங்கிக்கு வந்த வங்கி மேலாளர் அர்ஷ் சுவராஜ், பணம் எதுவும் திருடப்படாததால், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் மதியம் வரை, வங்கி உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளார். பின்னர் உயரதிகாரிகளின் அனுமதிக்குப் பின்னர், காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

குற்றப்பிரிவு போலீசார் சம்பவப்பகுதிக்கு வந்து ஏடிஎம் இயந்திரத்தை பார்வையிட்டு, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொணடு வருகின்றனர். மேலும் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த 12 இலட்சம் பணத்தை திருடமுடியாமல் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் இயந்திரத்தை சேதப்படுத்தி தப்பியோடி விட்டனர்.

மதியம் வரை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காத வங்கி மேலாளர் அர்ஷ் சுவராஜிடம், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநில தொழிலாளர்களின் கைவரிசையாக இருக்கமோ என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் உதகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு