பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் 3,261 காலிப்பணியிடங்களை அறிவிப்பு

பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் 3,261 காலிப்பணியிடங்களை அறிவிப்பு
X

பைல் படம்.

இந்த தேர்வுக்கு தயாராகும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 20-ந் தேதி முதல் தொடங்குகிறது.

பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் 3,261 காலிப்பணியிடங்களை (271 பிரிவு பணியிடங்கள்) நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 25-ம் தேதி கடைசி நாளாகும். இதற்கான தேர்வுகள் வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளது.

இதற்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ்-2 தேர்ச்சி, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மேற்கண்ட கல்வி தகுதியுள்ள மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு தயாராகும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வருகிற 20-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த வாய்ப்பினை நீலகிரி மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 0423-2223346 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!