நீலகிரியில் வாக்கு எண்ணிக்கைக்காக அனைத்து பணிகள் தயார்

நீலகிரியில் வாக்கு எண்ணிக்கைக்காக அனைத்து பணிகள் தயார்
X

கோப்பு படம்

நீலகிரியில் வாக்கு எண்ணும் மையத்துக்கு நுண் பார்வையாளர்கள் 3 பேர் வீதம் மொத்தம் 45 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊட்டி நகராட்சியில் பதிவான வாக்குகள் 9 சுற்றுகள் குன்னூர் நகராட்சியில் 4 சுற்றுகள், கூடலூர் நகராட்சியின 11 சுற்றுகள், நெல்லியாளம் நகராட்சியில் 5 சுற்றுகள், அதிகரட்டி பேரூராட்சியில் 6 சுற்றுகள், பிக்கட்டி பேரூராட்சியில் 8 சுற்றுகள், தேவர்சோலை பேரூராட்சியில் 6 சுற்றுகள், உலிக்கல் பேரூராட்சியில் 9 சுற்றுகள், ஜெகதளா பேரூராட்சியில் 8 சுற்றுகள், கேத்தி பேரூராட்சியில் 5 சுற்றுகள், கோத்தகிரி பேரூராட்சியில் 7 சுற்றுகள், கீழ்குந்தா பேரூராட்சியில் 8 சுற்றுகள், நடுவட்டம் பேரூராட்சியில் 8 சுற்றுகள், ஓவேலி பேரூராட்சியில் 6 சுற்றுகள், சோலூர் பேரூராட்சியில் 8 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறுகிறது. 15 வாக்கு எண்ணும் மையங்கள் தயார்படுத்தப்படுத்தப்பட்டு உள்ளது.

வாக்குகளை எண்ண 61 மேஜைகள் போடப்பட்டு உள்ளது.வாக்கு எண்ணும் பணிகளை மேற்பார்வையிட ஒரு வாக்கு எண்ணும் மையத்துக்கு நுண் பார்வையாளர்கள் 3 பேர் வீதம் மொத்தம் 45 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!