நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
X

நீலகிரி அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிமுக மாவட்ட செயலாளர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் திமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பொய்யான வழக்குகளை அதிமுக மீது சுமத்தி வரும் திமுகவை வன்மையாக கண்டிப்பதாகவும், ஆட்சிக்கு வந்தபின்பு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வெள்ளை அறிக்கை என பொய்யான அறிக்கையை வெளியிட்டு அதிமுக மீது குற்றம் சுமத்தி வருவதாக முழக்கங்களை எழுப்பினர். மேலும், ராணுவ அமைப்போடு இருக்கும் அதிமுக எதற்கும் அஞ்சாது, எஸ்பிவேலுமணி வீடுகளில் நடத்தப்படும் வருமானவரித்துறை சோதனை ஏமாற்றத்திலேயே முடியுமென கோஷங்கள் எழுப்பப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் கே ஆர் அர்ஜுனன் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் பால நந்தகுமார், நகர தலைவர் சண்முகம் உட்பட கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!