உதகையில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டம்

உதகையில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டம்
X
உதகையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.
உதகையில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உதகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவின் போது சென்னையில் திமுக கள்ள வாக்கு பதிவு செய்ததை கண்டித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பழிவாங்கும் நோக்கத்தோடு கைது செய்யப்பட்டார்.

இதனை கண்டித்து நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் உதகை ATC திடல் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத், நடைபெற்ற நகராட்சி தேர்தலில் சென்னையில் திமுகவைச் சேர்ந்த நரேஷ் குமார் என்பவர் கள்ள ஓட்டு போட முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டார்.

இதனை தட்டிக் கேட்டதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது, திமுக அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு கைது செய்தது. கள்ள ஓட்டு போட முயன்ற திமுகவை சேர்ந்த நரேஷ் குமார் மீது பிடிவாரண்டு மற்றும் 12 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இதனை தட்டிக் கேட்காமல் ஆளுங்கட்சியினர் வேண்டுமென்றே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பல்வேறு வழக்குகள் பதிவுசெய்தனர்.

இதனைக் கண்டித்து உதகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இறுதியில் திமுக அரசை கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர் அர்ஜுனன், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன், முன்னாள் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா