உதகை நகராட்சியில் போட்டியிடும் 36 வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பிரச்சாரம்

உதகை நகராட்சியில் போட்டியிடும் 36 வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பிரச்சாரம்
X

தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள். 

உதகை நகராட்சி மார்க்கெட் பகுதியில் வியாபாரிகளின் கோரிக்கையான கடை வாடகை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

வரும் பிப்ரவரி 19 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு பகுதிகளில் அனைத்துக் கட்சியினர் மட்டுமல்லாமல் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக உதகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து உதகை மார்க்கெட் பகுதியில் ஒரே இடத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இந்த பிரச்சாரத்தின் போது 36 வார்டுகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தால் முதலில் நகர மன்றத்தில் மார்க்கெட் வியாபாரிகளின் நீண்டநாள் கோரிக்கையான கடை வாடகை பிரச்சனையை உடனடியாக தீர்த்து வைக்கப்படுமென அதிமுக சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

தொடர்ந்து மார்க்கெட் பகுதியில் உள்ள கடைவீதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்தும் துண்டுப்பிரசுரங்களை வழங்கியும் தீவிர வாக்கு சேகரிப்பில் அதிமுகவினர் ஈடுபட்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!