உதகை: கலெக்டர் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் ஆலோசனை

உதகை: கலெக்டர் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் ஆலோசனை
X
மே 2 ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது கட்சியினர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்னிக்கை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும். இதையடுத்து இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் கூறும்போது வாக்கு எண்ணிக்கை நாளன்று அந்தந்த கட்சி பிரமுகர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கூறினார். வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு ஆரம்பமாகும், 14 மேசைகள் வைக்கலாம், கட்டாய முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி,கொரோனா பரிசோதனை அவசியம், ரிசர்வ் முகவர் இருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!