திமுக அரசை கண்டித்து உதகையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து உதகையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் உரிமைகுரல் முழக்கப் போராட்டம் உதகையில் நடைபெற்றது.

தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று கூறி, அரசை கண்டித்து உதகையில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில், திமுக அரசை கண்டித்து இன்று உதகையில் உரிமைக்குரல் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில், தேர்தலில் வாக்குறுதி அளித்து இதுவரை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி, திமுக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தேர்தல் வாக்குறுதியில் குடும்பத்தலைவிக்கு மாதம் 1000, நகைக்கடன் தள்ளுபடி, பெட்ரோல் கேஸ் விலை, நீட் தேர்வு ரத்து, என கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து இதுவரை நிறைவேற்றவில்லை இதை வன்மையாக கண்டிப்பதாக ஆர்பாட்டத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 1500 கிளைகளிலும் இந்த உரிமை முழக்கம் போராட்டம் நடைபெற்று வருவதாக நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் கே ஆர் அர்ஜூணன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் பால நந்தகுமார், முன்னாள் நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன்,உட்பட கட்சியின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!