ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
X

பைல் படம்.

நீலகிரி மாவட்ட ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ-மாணவிகளின் கல்வி நலனை கருத்தில் கொண்டு 2021-2022-ம் கல்வியாண்டிற்கான மத்திய அரசு நிதி ஆதரவான போஸ்ட் மெட்ரிக் (10-ம் வகுப்புக்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளும்), ப்ரிமெட்ரிக் (9, 10-ம் வகுப்புகள்) கல்வி உதவித்தொகை திட்டங்களுக்குரிய இணையதளம் டிசம்பர் மாதம் திறக்கப்பட்டு புதுப்பித்தல் செய்தல் பணி முடிந்தது.

இந்த திட்டங்களின் கீழ் பயன் பெற தகுதி வாய்ந்த மாணவ-மாணவிகளிடம் இருந்து சம்பந்தப்பட்ட பள்ளிகள் புதிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை பெற்று, அவர்களுடைய விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்ய வேண்டும்.

பின்னர் சாதிச் சான்று, வருமானச் சான்று, மதிப்பெண் சான்று, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், ஆதார் எண் போன்ற ஆவணங்களுடன் பிப்ரவரி 10-ந் தேதிக்குள் escholarship.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தவறாமல் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு உரிய கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து விண்ணப்பங்களை தவறுகள் இன்றி பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!