உதகை: விசாரணைக்கு ஆஜரானவர் 'சைக்கிள் கேப்'பில் கோர்ட்டில் இருந்து எஸ்கேப்

உதகை: விசாரணைக்கு ஆஜரானவர் சைக்கிள் கேப்பில் கோர்ட்டில் இருந்து எஸ்கேப்
X
மனைவியை கொன்ற வழக்கில், உதகை நீதிமன்றத்தில் இன்று ஆஜரானவர், திடீரென தப்பியோடியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உதகை அருகே, மனைவியை கொன்ற வழக்கில் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜரான கணவர், நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு, உதகை அருகே எடப்பள்ளி பகுதியில் பென்னி (58) என்பவர், தனது மனைவியை, நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது, உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உதகை மகளிர் நீதிமன்றத்தில், இன்று பிற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பின்னர், மாலை வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

இதையடுத்து, மீண்டும் வழக்கு நேரம் வந்தபோது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பென்னி, நீதிமன்றத்தில் இருந்து திடீரென தப்பி ஓடினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. காவல்துறையினர், தப்பியோடியவரை தேடத் தொடங்கினர். அவர் இருக்கும் இடத்தை அடையாளம் கண்டுள்ள போலீசார், அவரை பிடிக்க சென்றனர்.

மனைவியை கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர், நீதிமன்றத்தில் ஆஜராகி, சைக்கிள் கேப்பில் தப்பித்த சம்பவம் உதகையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி