உதகையில் மாவட்ட தொழில் மையம் சார்பில் நவீன வாகனம் வழங்கப்பட்டது

உதகையில் மாவட்ட தொழில் மையம் சார்பில் நவீன வாகனம் வழங்கப்பட்டது
X

நீலகிரி மாவட்ட தொழில் மையம் சார்பில் மலை மாவட்டங்களில் கட்டுமான பணிகள் செய்ய 33 லட்சம் மதிப்பிலான அதிநவீன கான்கிரீட் கலவை இயந்திர வாகனத்தை நீலகிரி கலெக்டர் இன்ன சென்ட் திவ்யா பயனாளிக்கு வழங்கினார்.

மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் முனைவோருக்கான திட்டத்தில் கான்கிரீட் வாகனத்தை நீலகிரி கலெக்டர் பயனாளிக்கு வழங்கினார்

நீலகிரி மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் முனைவோருக்கான பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. தற்பொழுது மாவட்டத்திலேயே முதன் முறையாக மலை மாவட்டங்களில் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் அதிநவீன கான்கிரீட் கலவை இயந்திர வாகனத்தை பயனாளிகளுக்கு வழங்கியுள்ளது.

மழைக்காலங்களில் கட்டுமான பொருட்கள் சேதம் அடைவதை தவிர்க்கும் வகையில் இந்த நவீன வாகனம் மூலம் கட்டுமான பணிகள் செய்யும் பகுதிகளுக்கு உடனடியாக கான்கிரீட் அமைத்துக் கொடுக்கும் வகையில் இந்த வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தை இன்று நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார் அதன்பின் வாகனத்தை பற்றி கூறிய நிறுவனம் நிலச்சரிவு பகுதிகள் மட்டுமல்லாது தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கும் வகையில் இந்த கான்கிரீட் கலவை இயந்திர வாகனம் புதிய தொழில்நுட்பத்துடன் இறக்குமதி செய்யப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!