உதகையில் 75 வது சுதந்திர தின விழா 'அமுத பெருவிழா' நிறைவு

உதகையில் 75 வது சுதந்திர தின விழா அமுத பெருவிழா நிறைவு
X

75-வது சுதந்திர தின விழாவையொட்டி மாரத்தான் ஓட்டம், கட்டுரை, பேச்சு, ஓவியம் கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் 25 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள், கேடயங்களை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

சுதந்திர அமுத பெருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி உதகை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.

நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், 75-வது சுதந்திர தின விழாவையொட்டி சுதந்திர தின அமுத பெருவிழா மற்றும் பலதுறை பணி விளக்க கண்காட்சியை 29.03.2022 அன்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

உதகை என்.சி.எம்.எஸ். மைதானத்தில் வனத்துறை, தோட்டக்கலைத்துறை, பள்ளி கல்வித்துறை, கால்நடை பராமரிப்பு துறை போன்ற பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அறிவிப்புகள் கண்காட்சி அரங்குகளில் இடம்பெற்றன. இன்று சுதந்திர அமுத பெருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி உதகை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.

கலெக்டர் சுதந்திர போராட்ட தலைவர்கள் மற்றும் தியாகிகளின் வரலாறு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதுகுறித்த அம்சங்களை மற்றவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒருங்கிணைந்து 75-வது சுதந்திர தின விழாவையொட்டி மாரத்தான் ஓட்டம், கட்டுரை, பேச்சு, ஓவியம் கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் 25 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள், கேடயங்களை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சையத் முகம்மத், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சரண் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself