சான்று இல்லாத தராசு - ஊட்டியில் 7 நகைக்கடைகளுக்கு அபராதம்

சான்று இல்லாத தராசு - ஊட்டியில் 7 நகைக்கடைகளுக்கு அபராதம்
X
நீலகிரி மாவட்டத்தில், உரிய சான்றிதழ் பெறாத எடை தராசுகள், எடைக்கற்கள் பயன்படுத்திய நகைக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னை ஆணையர் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள நகைக்கடைகளில் எடை தராசுகள் தொழில் துறை சார்பாக சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி ,கோத்தகிரி, கூடலூர் ஆகிய தாலுகாக்களில் திடீர் சோதனை நடைபெற்றது.

இந்த ஆய்வின்போது தராசு முத்திரைகள், பார்வையாளர்கள் பார்க்கும் வசதியில் உள்ளதா, சோதனை அளவீடு இருக்கின்றதா என சோதனை செய்யப்பட்டது. இதில் 7 கடைகளில் உரிய சான்றிதழ் இன்றி எடைக்கற்கள் இல்லாததால் , நகைக்கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், மீண்டும் எடைகற்கள் சரியாக இல்லாமலும், சான்றிதழ்கள் இல்லாமலும் இதேநிலை தொடர்ந்தால் தொழில் துறை சார்பில் நடத்தப்படும் திடீர் சோதனையில், தற்போது விதித்த அபராதம் இரண்டு மடங்காக உயர்த்தப்படும். மேலும் நீதிமன்ற வழக்கு தொடர நேரிடும் என, நீலகிரி மாவட்ட உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!