ஊட்டிக்கு 50 ஆயிரம் பயணிகள் 'விசிட்'
Ooty News Today - நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், கடந்த ஒரு மாதமாக கன மழை பெய்தது. இதனால், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் எண்ணிக்கை தினமும் ஆயிரத்துக்கும் குறைவாகவே இருந்தது. கடந்த மூன்று நாட்களாக மழை இல்லை. இந்நிலையில் வார விடுமுறை, சுதந்திர தின விடுமுறை என, மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை அடுத்து, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட தலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. மூன்று நாட்களில், 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்துள்ளனர்.
இதனால், ஊட்டியில் உள்ள சுற்றுலா விடுதிகள் நிரம்பின. நகரில் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுற்றுலா மையங்களில் உள்ளூர் மக்களின் கூட்டமும், அதிகளவில் காணப்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu