50 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்குவோம் -ராஜ்நாத்சிங்
வரும் 5 ஆண்டுகளில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் 50 லட்சம் வேலைவாய்ப்பை அரசு ஏற்படுத்தும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார்.
ஊட்டியில் இன்று பாஜக வேட்பாளரை ஆதரித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அவர் பேசும் போது, கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் மோடி தலைமையிலான அரசு சிறப்பாக கையாண்டதாக கூறினார். கொரோனா நோய்க்கான மருந்தை கண்டுபிடிப்பதில் சிறப்பாக பணியாற்றிய நமது விஞ்ஞானிகளை பாராட்டிய அவர், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ததோடு 72 உலக நாடுகள் பாராட்டும் வகையில் மருந்து ஏற்றுமதி செய்ய்பட்டதாக கூறினார் .தமிழக முதல்வரின் தாயார் குறித்து தரகுறைவாக ஆ.ராசா பேசியதற்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறிய அவர், இது வெட்கப்பட வேண்டிய ஒன்று, இதை தமிழக தாய்மார்களும் பெண்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார். வரும் 5 ஆண்டுகளில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் 50 லட்சம் வேலைவாய்ப்பை அரசு ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
வரும் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் நீலகிரி மாவட்ட விவசாயிகளின் பசுந்தேயிலைக்கு 30 ரூபாய் குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கபடும், உதக மண்டல இந்துஸ்தான் புகைப்பட தொழிற்சாலை வளாகத்தி தகவல் தொழில்நுட்ப பூங்கா ஏற்படுத்தப்படும், படுக இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்கப்படும், உதகை சர்வதேச சுற்றுலாதலமாக மேம்படுத்தப்படும் என உறுதியளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu